இப்படியுமொரு மனைவியா.. தன் கணவருக்கு கோவில் கட்டி மனைவி செய்து வரும் காரியம்! நெகிழவைக்கும் சம்பவம்!!

இப்படியுமொரு மனைவியா.. தன் கணவருக்கு கோவில் கட்டி மனைவி செய்து வரும் காரியம்! நெகிழவைக்கும் சம்பவம்!!


wife-build-temple-for-husband

பெண் ஒருவர் மறைந்த தனது கணவருக்கு கோயில் கட்டி நாள்தோறும் அந்த உருவச்சிலைக்கு பூஜை செய்துவரும் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் அங்கி ரெட்டி. அவரது மனைவி பத்மாவதி. அவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் திடீரென விபத்து ஒன்றில் ரெட்டி உயிரிழந்துவிட்டார். கணவரை இழந்து அவரது நினைவுடன் வாழ்ந்து வந்த பத்மாவதி நான்கு வருடங்களுக்குப் பின்பு தனது கணவருக்கு கோவில் கட்டியுள்ளார். கணவர் கனவில் வந்து கோயில் கட்ட கூறியதாக கூறப்படுகிறது.

Wife

மேலும் கோயிலின் உள்ளே அவர் தனது கணவரின் உருவச் சிலையை வைத்து நாள்தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கணவரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமியன்று ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்.

மறைந்த தனது கணவரின் நினைவாக கோவில் கட்டி பூஜை செய்து வரும் இவரது செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.