கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
ஆள் வைத்து கணவரை தாக்கிய மனைவி..! ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை ..!
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக். இவருக்கு வயது 36. இவரது மனைவி சங்கீதா. கார்த்திக், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கார்த்திக் சங்கீதாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்து கணவருடன் வாழ வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சார்பு நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக மனு தாக்கல் செய்துவிட்டு கார்த்திக் சின்னமனூர் தேரடி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சங்கீதா அருண்குமார் இருவரும் சேர்ந்து இரண்டு அடியாட்களை வைத்து கார்த்திகை குறிவைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து கார்த்திக் காவல்துறையில் புகார் தெரிவித்தார். பின்னர் காவல் துறை இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சங்கீதாவும் அருண்குமாரும் வராததால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் கோர்ட்டின் உத்தரவின் பெயரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.