தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.? வெளியான தகவல்.!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.? வெளியான தகவல்.!


when-do-schools-open-in-tamil-nadu-CG68U3

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. 

கொரோனாவால் 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்ளுடைய எதிர்காலம் குறித்த பயத்தில் இருக்கின்றனர்.

school

இந்தநிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கல்வியாண்டிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை அனைவருமே ஆல் பாஸ் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.