தமிழகம்

வாட்ஸ் ஆப் வீடியோ காலால் வந்த விபரீதம்! திடீரென வெளியான நிர்வாண வீடியோ! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

whats app video call problem


சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் மெடிக்கல் கோர்ஸ் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று அந்த பெண் வாட்ஸ் ஆப் வீடியோ கால் ஒன்றில் ஆபாசமாக தோன்றும் வீடியோ காட்சி அப்பகுதியில் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் வைரலானது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாக தற்கொலைக்கு முதற்சித்துள்ளார். இதனையறிந்த பெற்றோர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த விஷத்தை அறிந்த பெற்றோர், அந்த வீடியோவை பரப்பிய மூன்று பேர் மீது புகார் கொடுத்தனர். ஆனாலும் இந்த விஷயம்  ஊர் முழுவதும் தெரிவிந்துவிடும் என்று அஞ்சிய அந்த பெண், வீட்டில் இருந்த மாத்திரைகளை சாப்பிட்டதோடு, வயலுக்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருத்தையும் எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


அந்த இளம்பெண் தற்போது பணிபுரியும் கல்லூரியில் படித்து வந்தபோது அவரது ஆண் நண்பருடன் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து சென்றதை கவனித்த அதே ஊரை சேர்ந்த வரதராஜன் என்ற நபர் செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் காதலித்துக் கொண்டு ஊர் சுற்றுவதாக வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி, தன்னுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச வேண்டும் என்று கூறியுள்ளான்.அவனது மிரட்டலுக்கு பயந்த அந்த பெண், மிரட்டிய நபருடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் அவன் அந்த பெண்ணை ஆடைகளை களைய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான். மிரட்டலுக்கு பயந்து அந்த பெண் ஆடைகளை களைந்துள்ளார். அதனை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வரதராஜன் பதிவு செய்து வைத்துள்ளான். மேலும் அடுத்தகட்ட மிரட்டலாக அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதனால் அதிர்ச்ஜியடைந்த அந்த பெண், வரதராஜனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வரதராஜன், அவன் பதிவு செய்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளான். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

இதை போல யாராவது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினால் பெண்கள், மிரட்டலுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நேரடியாக புகார் அளிக்குமாறும், எக்காரணத்தை கொண்டும் வாட்ஸ் ஆப்பில் புகைபடங்களை பகிர்வதையோ, வீடியோ காலில் தோன்றுவதையோ கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது என்று போலீசார் தெரிவித்தனர்.


Advertisement