"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
என்ன கொடுமையா இது! வாத்தால் வந்த தகராறு.. இளைஞர் படுகொலை..!
திருப்பத்தூர் அடுத்த ஏ.கே மோட்டூர் பகுதியில் வசித்து வருபவர்கள் சிலம்பரசன் - யமுனா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சிலம்பரசன் டைல்ஸ் மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சிலம்பரசன் தனது வீட்டில் வாத்துக்கள் வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து சிலம்பரசன் வீட்டிற்கு அருகாமையில் வசித்து வருபவர் வெங்கடேசன் என்ற முதியவர். இவர் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர் எனவும் சில சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சிலம்பரசன் வளர்த்து வரும் வாத்துக்கள் இறைத்தேடி வெங்கடேசன் வீட்டிற்கு அருகாமையில் சென்று மேய்ந்து விட்டு வரும். இதனால் கோபமடைந்த வெங்கடேசன் இனி வாத்துக்கள் என் வீட்டு பக்கம் வரக்கூடாது என்று சிலம்பரசனிடம் சண்டையிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தன்று வாத்துக்கள் மேய்ச்சலுக்காக சென்ற போது வெங்கடேசனுக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட சிலம்பரசன் அதனை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது வெங்கடேசன் மீண்டும் சிலம்பரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்து கத்தியால் சரமாறியாக சிலம்பரசனை குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் சிலம்பரசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான வெங்கடேசனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.