அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தாய்-பாட்டி திட்டியதால் ஆவேசம்: 14 வயது சிறுவனின் விபரீத முடிவால் பெற்றோர் கண்ணீர்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், தாயில்பட்டி, கலைஞர் காலனியில் வசித்து வருபவர் வேளாங்கண்ணி. இவரின் மகன் செல்வம் (வயது 14).
சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வத்தை அவரின் பாட்டி மற்றும் தாயார் திட்டி இருக்கின்றனர். இதனால் செல்வம் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனிடையே, வீட்டில் இருந்த செல்வம், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விரக்தியில் சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அவரை அழைத்துச்சென்றபோது, அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை எடுத்துக்கொண்டது மரணத்திற்கு காரணமாக அமைந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வெம்பக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.