தமிழகம்

காதலனை வேறு பெண்ணுக்கு நிச்சயம் செய்ததால் சோகம்.. காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை முயற்சி.!

Summary:

காதலனை வேறு பெண்ணுக்கு நிச்சயம் செய்ததால் சோகம்.. காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை முயற்சி.!

காதல் விவகாரத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வரன் பார்த்து காதலனை மற்றொருவருக்கு நிச்சயம் செய்த நிலையில், மனத்துயரடைந்த பெண்மணி தற்கொலை செய்துள்ளார். காதலியின் இறப்பை ஏற்க இயலாமல் காதலனும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், அய்யனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே கிராமத்திற்கு அருகே உள்ள இந்திரா காலனியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், முனீஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யவும் முடிவெடுத்து, பெண் பார்த்து பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மகேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. 

இதனால் மனதளவில் உடைந்துபோன மகேஸ்வரி, 2 நாட்களுக்கு முன்னதாக வீட்டருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கீழராஜகுலராமன் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மகேஸ்வரியின் தற்கொலை விவகாரம் தாமதமாக முனீஸ்வரனுக்கு தெரியவந்துள்ளது. 

தகவலை அறிந்த முனீஸ்வரன் நடுத்தெருவில் கத்தி கூப்பாடு போட்டு கதறி அழுது புரண்டுள்ளார். மேலும், வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் பழைய கட்டிடத்தில் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முனீஸ்வரனை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக கீழராஜகுலராமன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajapalayam 


Advertisement