இராஜபாளையம் நகராட்சியை முதன் முறையாக கைப்பற்றிய திமுக.. அமோக வெற்றி.!

இராஜபாளையம் நகராட்சியை முதன் முறையாக கைப்பற்றிய திமுக.. அமோக வெற்றி.!



Virudhunagar Rajapalayam Municipal Election Victory by DMK and DMK Alliance Parties

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. 42 வார்டுகளில் வசித்து வரும் மக்களில், வாக்களிக்க தகுதியானவர்கள் எண்ணிக்கை 1,16,286 ஆகும். இவர்களில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 72,604 ஆகும். 

இந்த நகர்ப்புற தேர்தலில், இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் 33 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி அடைந்துள்ளனர். இதனால் திமுக பல வருடத்திற்கு பின்னர் இராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியுள்ளது. 

வார்டு வரிசையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்: 

வார்டு 1:

சங்கர் கணேஷ் (காங்) - 1207
ராமராஜ் (அதிமுக) - 417
நவநீதகிருஷ்ணன் (பாஜக) - 117
வீரமுத்து (பாமக) - 20

வார்டு 2: 

அழகுலட்சுமி (அதிமுக) - 834
பொண்ணுத்தாய் (திமுக)  - 819
பேமலை (சுயே) - 214
வெள்ளையம்மாள் (அமமுக) - 48
கோகிலாதேவி (பாஜக) - 41
பெருமாள் எ பிரியா (பாமக) - 13

வார்டு 3:

சுரேஷ்குமார் (சுயே) - 880
ராசு (காங்) - 79
சந்திரசேகர் (தேமுதிக) - 22
முனியாண்டி (அமமுக). - 19  

Virudhunagarவார்டு 4: 

மீனாட்சி (அதிமுக) - 935
கார்த்திகா (திமுக) - 861
கீதா (அமமுக) - 130
சுப்புலட்சுமி (பாஜக) - 89

வார்டு 5: 

வள்ளி (திமுக) - 1042
ராஜம் (அதிமுக) - 561
முருகலட்சுமி (அமமுக) - 51

வார்டு 6: 

பவித்ரா ஷ்யாம் (திமுக) - 1213
ஹரிணி (அதிமுக) - 204
செல்வராணி (அமமுக) - 29

வார்டு 7: 

வைரமுத்து (திமுக) - 760
மா. சரவணன் (அதிமுக) - 504
பெ. சரவணன் (சுயே) - 501
ராம்குமார் (பாஜக) - 74

வார்டு 8: 

இந்துமதி (திமுக) - 901
ஜெயப்ரியா (அதிமுக) - 548
துர்க்கா செல்வி (அமமுக) - 73

வார்டு 9: 

முகமது ரபிக் (திமுக) - 1048
தவமணி (அமமுக) -. 413
சந்தனம் (அதிமுக) - 340
சதீஷ்குமார் (பாஜக) - 9

வார்டு 10: 

மாலா (திமுக) - 1470
பாக்கியம் (அதிமுக) - 616

வார்டு 11: 

சபீனா பேஹம் (திமுக) - 998
ஹமிதா பீவி (அதிமுக) - 304

வார்டு 12: 

திருமலைக்குமார் (திமுக) - 1006
ஜீவா (அதிமுக) - 922

வார்டு 13: 

ஷாலினி (திமுக) - 1208
செல்வி (அதிமுக) - 776

வார்டு 14: 

அர்ச்சனா (திமுக) - 938
பவளஜோதி (அதிமுக) - 810

Virudhunagar

வார்டு 15: 

ராணி பாலாதேவி (திமுக) - 865
ராஜேஸ்வரி (சுயே) - 543
அய்யம்மாள் (அதிமுக) - 526
செல்வராணி (நாதக) - 121

வார்டு 16: 

ஜெயசுதா (திமுக) - 1207
சுசிலா (அதிமுக) - 860
மல்லிகா (அமமுக) - 107 
மணிமேகலை (பாஜக) - 47

வார்டு 17: 

ஜெகதீஸ்வரி (திமுக) - 908
பிரமு (அதிமுக) - 488

வார்டு 18: 

சோலைமலை. (அதிமுக) - 922
செந்தமிழ் செல்வன் (மாகம்யூ) - 817
நாகராஜன் (தேமுதிக) - 216
வேல்முருகன் (பாஜக) - 118

வார்டு 19: 

செந்தில் குமார்.  (திமுக) - 1264
முருகேசன் (அதிமுக) - 1075
செல்வி (சுயே) 89
வெங்கடேஸ்வரன் (பாமக) - 26
சுந்தரமூர்த்தி (பாஜக) - 21

வார்டு 20: 

பாலசுந்தரி (திமுக) - 824
நிர்மலா (அதிமுக) - 699
மாரியம்மாள் (பாஜக) - 92

வார்டு 21: 

ஞானவேல் (திமுக) - 1006
ரவி (அதிமுக) - 530
குமார் (தேமுதிக) - 22
கிருஷ்ணமூர்த்தி (பாமக) - 19

வார்டு 22: 

ரோஹிணி (திமுக) - 1114
ஆவுடையம்மாள் (சுயே) - 1040
ஜெயராம் (அதிமுக) - 106

வார்டு 23: 

குருசாமி (திமுக) - 1006
கதிரேசன். (அதிமுக) - 352
பூமாலை ராஜா (சுயே) - 160
ராமசுப்பிரமணி (நாதக) - 43
பாலமுருகன் (தேமுதிக) - 31

வார்டு 24: 

செல்வலட்சுமி (திமுக) - 853
சிவசங்கரி (அதிமுக) - 670
முனீஸ்வரி (அமமுக) - 38

Virudhunagar

வார்டு 25: 

சுப்புலட்சுமி (திமுக) - 1167
குருசாமி (அதிமுக) - 868
வெயில் முத்து (தேமுதிக) - 129

வார்டு 26: 

மாரியப்பன் (திமுக) - 1080
முருகேஸ்வரி (அதிமுக) - 820
வைரவன் (அமமுக) - 66
அழகுராஜ் (நாதக) - 36

வார்டு 27: 

சுமதி (திமுக) - 1354
ஹரிணி (அதிமுக) - 205
பத்ரகாளி (சுயே) - 58

வார்டு 28:

ராமலட்சுமி (திமுக) - 917
சீதாலட்சுமி (அதிமுக) - 629

வார்டு 29: 

கீதா (திமுக) - 1067
ராதிகா (அதிமுக) - 211

வார்டு 30: 

ராதாகிருஷ்ண ராஜா (திமுக) - 589
நாராயணன் (அதிமுக) - 452

வார்டு 31: 

ராதா (திமுக) - 885
சீதா கல்யாணி (அதிமுக) - 187
கீதா (பாஜக) - 63
மகேஸ்வரி (அமமுக) - 56
    
வார்டு 32: 

கல்பனா (திமுக) - 982
செல்லப்பாண்டியன் (அமமுக) - 584
அழகுராணி (அதிமுக) - 565
தாமோதரன் (சுயே) - 210

வார்டு 33: 

அருள் உதயம் (திமுக) - 1095
சோ. ராஜா (அதிமுக) - 542
கார்த்திக் (சுயே) - 164
ந. ராஜா (அமமுக) 104

வார்டு 34: 

புஷ்பம் (காங்) - 762
ரமணி (பாஜக) - 337
சரளாதேவி (அதிமுக) - 188
விஜயலட்சுமி (அமமுக) - 146

வார்டு 35: 

ரா. சங்கர்கணேஷ் (காங்) - 953
வடிவேல் சித்தன் (அதிமுக) - 611
சிவராம் (பாஜக) - 114      ‌‌‌‌

வார்டு 36: 

கோபிநாத் (சுயே) - 871
பாஸ்கரன் (திமுக) - 314
சிங்கராஜ் (அதிமுக) - 76
பிரேம ராஜா (பாஜக) - 63

Virudhunagar

வார்டு 37: 

கார்த்திக் (திமுக) - 708
ரிஷிகேஷ் (பாஜக) - 285
ராஜேந்திர பிரபு (சுயே) - 131
கோபால் ராஜா (அதிமுக) - 68
குருநாதன் (அமமுக) - 64

வார்டு 38: 

வீரலட்சுமி (திமுக) - 778
முத்துப்பாண்டி செல்வி (இகம்யூ) - 458
சீதாலட்சுமி (அதிமுக) - 352
வள்ளி (பாஜக) - 106

வார்டு 39: 

ஜான் கென்னடி (திமுக) - 721
யோகசேகரன் (அதிமுக) - 579

வார்டு 40: 

ஷியாம் ராஜா (திமுக) - 1120
கருப்பசாமி (அதிமுக) - 221
கார்த்திகேயன் (அமமுக) - 31

வார்டு 41: 

ராஜ் (திமுக) - 771
கவிதா (அதிமுக) - 386
அப்பாசாமி (சுயே) - 129

வார்டு 42: 

சீனிவாசன் (திமுக) - 885
பரமசிவம் (அதிமுக) - 485
வாஹினி (பாஜக) - 89 

இராஜபாளையம் நகராட்சியின் 42 வார்டுகளில் திமுக 33 இடங்களையும், அதன் கூட்டணிக்கட்சி 3 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மையாக திமுக முதல் முறையாக இராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியுள்ளது. 

இராஜபாளையத்தில் தொடர்ந்து திமுக 2 ஆவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடைந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் கைப்பற்றியுள்ளது. 

வெற்றிப்பின்னணி காரணம் என்ன?.. 

இராஜபாளையம் நகராட்சி மற்றும் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பிரதான தேவையாக இருந்தது இரயில்வே மேம்பாலம் மற்றும் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் ஆகும். கடந்த காலங்களில் அதிமுக எம்.எல்.ஏ சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், இரயில்வே மேம்பால பணிகள் கொண்டு வரப்படவில்லை.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போது உள்ளூரில் நடந்த ஒரு சில விஷயங்கள் பாமர மக்களை சோதிக்கும் வகையில் இருந்தது. அங்கு ஆதிக்கமாக இருக்கும் நபர்களின் கைகள் ஓங்க, அவர்களின் கட்டுப்பாட்டில் ஊர் செல்லும் என்ற எண்ணமும் எழுந்தது. அப்போது, அவர்கள் ஆதரவு நபர்களுக்கு அதிமுக வேட்பாளர் வாய்ப்பும் வழங்கியது. 

இதனால் ஏற்பட்ட பயம் மக்களை திமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் அன்றைய ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் பாலம் அமைக்க பணிகளை தொடங்க உத்தரவிட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் தொகுதி மக்கள் சில வருடங்களில் இரயில்வே மேம்பாலம் பயனுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் உற்சாகமடைந்தனர். 

மேலும், நகர மக்கள் எதிர்பார்த்த தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு வாய்ப்பளித்த மக்கள், உள்ளாட்சியிலும் அமோக வெற்றியை வாரி வழங்கியுள்ளனர்.