தோனியின் அபார சாதனையை முறியடிக்க போகும் விராட் கோலி! நாளைய போட்டியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

தோனியின் அபார சாதனையை முறியடிக்க போகும் விராட் கோலி! நாளைய போட்டியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!


virat will beat MS Dhoni record

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்பதை தற்போதுவரை தல தோனி தக்கவைத்துக்கொண்டுள்ளார். சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் சாதனை மன்னன் என்றால் அது ஜாம்போவான் சச்சின் டெண்டுல்கர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கேப்டன் என்ற முறையில் பல சாதனைகளை படைத்தது தல தோனி தான்.

இந்தநிலையில் தல தோனியின் சாதனைகளை தற்போது விராட் கோலி முறியடித்து வருகிறார். குறுகிய காலத்தில் இளம் வயதில் இந்திய அணிக்கு அதிகப்படியான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் விராட். தற்போது இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. 

virat

இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்து, டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைக்கவுள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து தோனி 1112 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் விராட் கோலி 1088 ரன்களை எடுத்துள்ளார்.

இந்தநிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் விராட் 25 ரன்கள் எடுத்து தோனியை முந்தி டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.