கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி.. 10 நாட்களாக அடைத்துவைத்து கற்பழிப்பு.. போலிச்சாமியார் உட்பட 3 பேர் கைது.!

கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி.. 10 நாட்களாக அடைத்துவைத்து கற்பழிப்பு.. போலிச்சாமியார் உட்பட 3 பேர் கைது.!


Viluppuram Tindivanam Child Minor Girl Sexual Abused by Fake Preacher Last 10 Days

சிறுமியை கடந்து சென்று 10 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த போலிச்சாமியார் திண்டிவனம் அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு பயின்றுவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி தாய் திட்டிய காரணத்தால் கோபித்துக்கொண்டு சிறுமி, வீட்டில் இருந்து வெளியேறி சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை கடந்த 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி கடத்தப்பட்டது உறுதியானது. சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி செல்கையில் கொண்டு செல்லப்பட்ட செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்கையில், சிறுமி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் இருப்பது உறுதியானது. 

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், ஆத்தூரில் உள்ள புவனேஸ்வரி நகரில் இருந்த சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியை கடத்தி சென்ற செய்யூர் எடையாத்தூர் பகுதியை சார்ந்த எல்லப்பன் (வயது 39) என்பவரையும் கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் பேரில் உடந்தையாக இருந்த தொழுப்பேடு ஆட்டோ ஓட்டுநர் பிரபு (வயது 35), ஆத்தூர் சின்னப்பையன் (வயது 50) ஆகியோரும் கைதாகினர். 

Viluppuram

இவர்களிடம் நடந்த விசாரணையில், எல்லப்பன் மாந்த்ரீக பூஜை செய்யும் சாமியார் என்று கூறி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி கீழ் ஆதனூர் பகுதியில் தனியாக நின்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த போலிச்சாமியார் எல்லப்பன் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். 

பின்னர், சிறுபெரும்பூண்டி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநரான அப்பு என்ற பிரபுவின் வீட்டில் சிறுமியை 5 நாட்களாக அடைத்து வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, எல்லப்பன் சிறுமியை அழைத்துக்கொண்டு உறவினரான ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் வசித்து வரும் சின்னப்பையன் வீட்டில் 5 நாட்களுக்கும் மேல் அடைத்து வைத்துள்ளார். அங்கு எல்லப்பன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.