கள்ளக்காதலியை மறக்க முடியாததால் பயங்கரம்; மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொலை செய்த கொடூரம்.!Viluppuram Man Killed Affair Girl 

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம், நகர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி விசாலாட்சி. விசாலாட்சிக்கும் - மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கள்ளக்காதல் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் கிராம மக்களுக்கு தெரியவரவே, இருவரும் உறவை முறித்துக்கொண்டதாக தெரியவருகிறது. உறவு முறிவு விவகாரத்தில் முருகனுக்கு விருப்பம் இல்லை. 

இதனை ஏற்றுக்கொள்ளாத முருகன், ஆகஸ்ட் 19ம் தேதி செல்போன் மூலமாக விசாலாட்சியை தொடர்புகொண்டு பேசி, ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு வரவழைத்துள்ளார். கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றிருக்கிறார்.

Viluppuram

அங்கு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற முருகன், கள்ளக்காதலி விசாலாட்சி கையில் இருந்த மண்ணெண்ணெயை பறித்து, வரின் மீதே ஊற்றி தீ வைத்து தப்பி சென்றார். 

உடலில் தீப்பற்றி எறிந்த நிலையிலேயே ஊருக்குள் ஓடிவந்த விசாலாட்சியை பார்த்து பதறிப்போன மக்கள், விரைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24ல் உயிரிழந்தார். 

உயிரிழப்புக்கு முன்னதாக தனது மரணத்திற்கு காரணம் முருகனே என வாக்குமூலம் அளித்த காரணத்தால், முருகனை கைது செய்த காவல் துறையினர், அவரின் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.