தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு பள்ளி ஆசிரியர்களின் அசத்தல்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!

Summary:

Village people appriciate to school teachers

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர்  அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மழையூர் காவல் நிலையம் இணைந்து  இன்று (18-09-2019 )சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி  தலைமையாசிரியர் திரு. பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் கணினி ஆசிரியர் பாலச்சந்திரன் உட்பட சக ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்துகொண்டனர். 

மேலும் இந்த பேரணியில், மழையூர் காவல்நிலைய துணை ஆய்வாளர் மற்றும் காவலர்களும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சமீப காலமாகவே இந்த மழையூர் அரசு பள்ளி பொதுமக்களால் பாராட்டப்பெற்று வருகிறது. 

அதற்கு முக்கிய காரணம் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தான். அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வதால், தனியார் பள்ளிகளில் படித்து கொண்டிருந்த மாணவர்களை, மழையூர் அரசு பள்ளியில் சேர்க்கின்றனர் பெற்றோர்கள். 

மழையூர் அருகே ஏராளமான விவசாயம் செய்யும் கிராமங்கள் உள்ளதால், மாணவர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், பொது இடங்களில் மரங்களை நடுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள். அப்பள்ளியில் பணிபுரியும் அணைத்து ஆசிரியர், ஆசிரியைகளையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


Advertisement