அடஅட.. இந்த காலத்திலயும் இப்படியொரு அதிசய கிராமமா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?? குவியும் பாராட்டுகள்!!

அடஅட.. இந்த காலத்திலயும் இப்படியொரு அதிசய கிராமமா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?? குவியும் பாராட்டுகள்!!



village-have-no-drinks-and-dowry-42rtx7

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் ஆ. கோப்பை கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், கூலி தொழில்களை செய்து வாழ்ந்து வரும் இந்த கிராமத்தினர் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றனர். இங்கு அதிகமாக கூரை மற்றும் ஓட்டு வீடுகள் அமைந்துள்ளதாம்.

அவற்றில் முக்கியமாக கிராமத்தில் வசிக்கும் யாரும் மது அருந்த மாட்டார்களாம். அப்படி யாரேனும் தடையை மீறி மது அருந்தினால் ஊர் கட்டுப்பாடுகளுக்கு கீழ்பணிய வேண்டும். மேலும் கிராமத்தில் வசித்து வருபவர்கள் வெளியூர் சென்றாலும் குடிக்க மாட்டார்களாம். இந்த கட்டுப்பாடுகளுக்கு காவலாக அவர்கள் ஊர் கருப்பசாமி இருப்பதாக அந்த கிராமத்தினர் நம்புகின்றனர்.

அதுமட்டுமின்றி தற்போது திருமணம் என்றாலே முதலில் வரதட்சனை குறித்து பேசுவது அதிகமாகிவிட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தினர் திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவது கிடையாதாம். மேலும் வரதட்சணை கொடுப்பதும் இல்லையாம். இந்த அதிசய கிராமம் குறித்த தகவல் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.