
Village girl drinks beer with nighty video goes viral
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என கூறியும் மதுவால் நாசமாகும் குடும்பங்கள் பல உள்ளன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தயவு செய்து மதுவை ஒழியுங்கள், எங்களை வாழவிடுங்கள் என இரத்தம் சிந்தி போராடும் இதே மண்ணில் நைட்டியுடன் பெண்கள் கும்பலாக சேர்ந்து பீர் குடிப்பதும், அதை அங்கிருக்கும் இளைஞர்கள் வீடியோ எடுக்கும் காட்சியும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தின், பெயர் குறிப்பிடப்படாத அந்த கிராமத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்கள் வரிசையாக நின்று முழு பாட்டில் பீரை குடித்துவிட்டு, பாட்டில் காலியானதும் அங்கிருந்து ஓடுகின்றனர். மேலும் சில பெண்கள் இந்த காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர்.
வீதியில் நின்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக செய்துள்ள இந்த காரியம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Advertisement
Advertisement