திமுக வெற்றி குறித்து கேப்டன் விஜயகாந்த் முதல் முறையாக வெளியிட்ட அறிக்கை.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?vijayakanth wishes to mk stalin

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில்,  திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியமைக்கவுள்ளது. 

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍.

தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.