
vijayakanth talk about EIA 2020
இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கையை உடனே மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 வரைவு (இ.ஐ.ஏ) எதிராக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.#EIADraft2020 | #நம்கண்களை_நாமே_குத்திக்கொள்வதற்கு_சமம் pic.twitter.com/iJskY05lng
— Vijayakant (@iVijayakant) July 27, 2020
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கை தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கைக்கு பலரும் ஆதரவு கொடுத்துள்ளனர். "நல்ல விசயத்திற்கு முதலில் குரல் கொடுக்குறீங்க சூப்பர் கேப்டன்" என இளைஞர்கள் அவரின் ட்விட்டர் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement