தர்மம் வெல்லும்..! மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்.! தே.மு.தி.க-வினர் மகிழ்ச்சி.!

தர்மம் வெல்லும்..! மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்.! தே.மு.தி.க-வினர் மகிழ்ச்சி.!


vijayakanth return to home

உடல் நிலை கோளாறு காரணமாக விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தே.மு.தி.க. சார்பில் மட்டுமே நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. 

விஜயகாந்த் திடீரென நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால், தே.மு.தி.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து வழக்கமான பரிசோதனைக்காகவே, விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று மாலை விஜயகாந்த் வீடு திரும்பினார். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் அவரது சமூக வலைதள பக்கத்தில், விஜயகாந்த் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அவரது உடல் ஆரோக்கியத்திற்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தே.மு.தி.க., தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.