தமிழகம் Covid-19

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்.! விஜயகாந்த் அறிவிப்பு.

Summary:

Vijayakanth give space

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுடன் நேரடியாக போராடி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மக்களை காப்பாற்றிவருகின்றனர். ஆனால், மக்களை காப்பாற்ற போராடும் போராட்டத்தில் கொரோனாவிடம் தோற்று உயிர் இழக்கும் மருத்துவர்களை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவர் ஒருவர் கொரோனால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Advertisement