கொரோனாவை தடுக்க இதுதான் வழி! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட ஆடியோ!

கொரோனாவை தடுக்க இதுதான் வழி! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட ஆடியோ!


vijayabaskar talk about corona


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,282-லிருந்து 4,40,215-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,699-லிருந்து 14,011-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 64,603 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், இரண்டு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வெளியில் சென்று வந்தால் கை கால்களை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நம்முடைய சுயகட்டுப்பாடு மிகவும் முக்கியம். மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம். இது ஓவ்வொருவருடைய உயிரை காப்பதற்காக சொல்கிறோம். நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்தே இல்லாத நிலையில், சுயகட்டுப்பாடு இருந்தால்தான் எதிர்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.