2ம் வகுப்பு படிக்கும் மாணவியால் கிராமத்துக்கே அடித்த அதிர்ஷ்டம்! மெர்சலான விஜய் சேதுபதி!!

2ம் வகுப்பு படிக்கும் மாணவியால் கிராமத்துக்கே அடித்த அதிர்ஷ்டம்! மெர்சலான விஜய் சேதுபதி!!


vijay-sethubathi-shocked-for-young-girl

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,  கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

namma ooru hero
இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் "நம்ம ஊரு ஹீரோ" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் கடந்தவாரம், ஹனீப்பா ஜாரா எனும் சிறுமி ஹீரோவாக அழைத்து வரப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரின் நேர்மை.

நேர்மையின் உச்சமாக அப்பாவின் மீதே புகார் கொடுத்துள்ளார். அப்பா கழிவரை கட்டிக் கொடுக்க வில்லை என்று கூறியுள்ளார். இதனால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அதிர்ஷ்டமாக கழிவரை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 குடும்பங்களுக்கு கழிவரை கட்டிக் கொடுக்க காரணமாக இருந்த சிறுமியின் நேர்மையை பலர் பாராட்டி வருகின்றனர். மேலும், வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராகச் சிறுமி ஹனீப்பா ஜாராவை நியமித்துள்ளார் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி.