தளபதி VS தளபதி: முடிவு எடுத்தால் முதல்வர் தான்... வைரலாகும் போஸ்டர்... அதிர்ச்சியில் திமுகவினர்.!



Vijay poster viral in madurai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் செல்லமாக தளபதி என அழைத்து வருகின்றனர். இவருக்கு என உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினையும் அவரது தொண்டர்கள் செல்லமாக தளபதி என அழைத்து வருகின்றனர். இதனால் தளபதி என்ற பட்டத்திற்கு அடிக்கடி சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் திமுகவினரை சீண்டும் விதமாக போஸ்டர் ஒன்றை அடித்துள்ளனர். தற்போது அப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் களம் இறங்க வேண்டும் என்றும், முடிவு எடுத்தால் முதல்வர் தான் என்றும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

vijay

மேலும் முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்க்கு பிரபல தனியார் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தான் தேர்தல் ஆலோசகர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் திமுகவினரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக 2021இல் தளபதி ஸ்டாலினையும், 2026 தளபதி நடிகர் விஜய்யும் என்று விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.