
Vijay harish sex abuse college girl
தமிழ் சினிமாவில் தூறல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடம் மற்றும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சூர்ய பிரகாஷ் என்ற சூர்யகாந்த். இவரது மகன் விஜய் ஹரிஷ். 25 வயது நிறைந்த இவர் தேனாம்பேட்டையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். மேலும் அவர் நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர், விஜய் ஹரிஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது விஜய் ஹரிஷ் அந்த மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விஜய் ஹரிஷ் அந்த மாணவியை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துசென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி, அந்த மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜய் ஹரீஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement