கேப்டனுக்கு என்ன ஆச்சு?? விஜயகாந்த் மகன் வெளியிட்ட வீடியோ பதிவு

கேப்டனுக்கு என்ன ஆச்சு?? விஜயகாந்த் மகன் வெளியிட்ட வீடியோ பதிவு


Vijakanth son released a video about his health

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைபாடு காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் கூட அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். 

இந்நிலையில் நேற்று இரவு சென்னை மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில், `விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என அறிவித்துள்ளது.

vijayakanth

மேலும் அவரின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ``அப்பா உடல்நிலைகுறித்துப் பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. ஆனால், அப்படி ஒன்றுமே இல்லை. அப்பா உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றால், நான் அங்குதானே இருக்க வேண்டும். நான் எனது சொந்த வேலையாக நெல்லூர் வரை வந்துள்ளேன். அவர் ராஜா மாதிரி இருக்கிறார். நாங்க எல்லோரும் அவரை நல்லபடியா பாத்துக்கிறோம். அவருக்கு ஒன்றும் ஆகாது என்று கூறியுள்ள வீீடியோவை பாருங்கள்.