வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது! யார் முன்னிலை தெரியுமா?

வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது! யார் முன்னிலை தெரியுமா?


velur-electoin-vote-counting


பணப்பட்டுவாடா புகாரை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல், கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.velur

அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆணந்த், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

தற்போதய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அதிமுக 4,406 வாக்குகளும், திமுக 3,994 வாக்குகளும் பெற்றுள்ளது. வாக்கு வித்தியாசம் 412 வாக்குகள் ஆகும். நாம் தமிழர் கட்சி 400 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருக்கிறார்.