திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்; புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!



Vellore Women Died by Suicide 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கத்தூர், கீழ் கொத்தூர், புதுமனை காலனி பகுதியில் வசித்து வருபவர் திருப்பதி. இவரின் மனைவி வளர்மதி. தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் இரண்டாவது மகன் தமிழரசன் (வயது 26). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

தமிழரசனுக்கும் - திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 22) என்ற பெண்ணிற்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தை தொடர்ந்து, புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில், தமிழரசன் தனது மாமா மகளை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த உண்மையை மறைந்து மீனாட்சியை இரண்டாவதாக கரம்பிடித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் மீனாட்சிக்கு தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் தொடபிராக தமிழரசன், மாமனார் - மாமியார் இடையே கேள்வி எழுப்பியபோது தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்துபோன மீனாட்சி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

காலையில் எழுந்ததும் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு தமிழரசன் அலறவே, அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்துள்ளனர். பின் தகவல் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையை தொடர்ந்து, மீனாட்சியின் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. அக்கடிதத்தில், "தமிழரசனை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினேன். மாமா எனது பேச்சுக்கள் எதையும் கேட்காமல் என்னை திருமணம் செய்துவைத்தார். நான் நிம்மதியுடன் இல்லை. அப்பாவிடம் போகிறேன். கணவர் தமிழரசனை ஒன்றும் செய்ய வேண்டாம். நான் நிம்மதியுடன் இல்லை, அவராவது நிம்மதியுடன் இருக்கட்டும்" என கூறினார்.