தமிழகம்

டியூசனுக்கு வந்த மாணவிக்கு 55 வயது கிழட்டு காமுகன் பாலியல் தொல்லை.. தீ வைத்து சம்பவம் செய்த உறவினர்கள்.!

Summary:

டியூசனுக்கு வந்த மாணவிக்கு 55 வயது கிழட்டு காமுகன் பாலியல் தொல்லை.. தீ வைத்து சம்பவம் செய்த உறவினர்கள்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர் வேலூரில் உள்ள சலப்பிரம் சாலையில் ஒரு மாதமாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். 

இவரிடம் பல மாணவிகள் டியூசன் பயின்று வந்த நிலையில், தன்னிடம் பாடம் படிக்கச் வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். 

இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் விஷயம் தொடர்பாக புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, பாபுவின் டியூசன் சென்டருக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் கூர்பாடுகிறது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.


Advertisement