தமிழகம்

மாலையும் கழுத்துமாக நிற்கவேண்டிய மகள்! கடைசி நேரத்தில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Vellore girl missed on wedding day

வேலூர் மாவட்டம் வெள்ளக்குட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் மகள் ஐஸ்வர்யா. இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் மோட்டூர் என்னும் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டியின் மகன் விநாயகம் என்பவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற இருந்தது.

திருமண நாள் அன்று மணமகளுக்கு நலங்கு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களை உறவினர்கள் செய்துள்ளனர். அதன்பிறகு குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு ஐஸ்வர்யா சென்றுள்ளார். குளிக்க சென்ற ஐஸ்வர்யா நீண்ட நேரமாகியும் வெளியேவரவில்லை. உறவினர்கள் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐஸ்வர்யாவை அங்கே காணவில்லை. குளிப்பதாக கூறிவிட்டு சென்ற மகளை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மாலையும் கழுத்துமாக மணமேடையில் நிற்கவேண்டிய இளம் பெண் காணாமல் போனது அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement