ஏ டி எம் எந்திரத்தை கோடாரியால் உடைத்த கூலித் தொழிலாளி... காவல்துறை தீவிர விசாரணை.!



vellore-a-laborer-broke-an-atm-machine-with-an-axe-poli

வேலூர் மாவட்டம் ஊசூர் அணைக்கட்டு பகுதியிலிருந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் அதனை கோடாரியால் உடைத்த கூலித் தொழிலாளியால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து  வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஊசூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(53). கூலித் தொழிலாளி ஆன இவர்  இன்று காலை அப்பகுதியில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்று இருக்கிறார். தனது ஏடிஎம் கார்டை  இயந்திரத்திற்குள் செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் எதுவும் வரவில்லை. அவர் பலமுறை முயற்சி செய்தும் பணம் வராததால் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

India

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கந்தசாமி வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார் . இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை தடுக்க முயன்றனர் ஆயினும் ஆத்திரம் தீராத கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை கோடாரையால் சுக்கு நூறாக அடித்து நொறுக்கினார்.

India

இதனைத் தொடர்ந்து அவரைப் பிடித்து வைத்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் இயந்திரத்தை பரிசோதித்துப் பார்த்தபோது அதிலிருந்து பணம் எதுவும் திருடு போகவில்லை. கந்தசாமி ஆத்திரத்தில் தான் இப்படி செய்து இருக்கிறார் என்று தெரிய வந்தது. மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணைக்கு பிறகு உண்மை என்ன என்று தெரியவரும்.