அது இடுப்பு இல்ல!! இந்திரனோட படைப்பு!! ராஷ்மிக்காவின் இடுப்பை பார்த்து கவிதை பாடும் ரசிகர்கள்..
16 வயது காதலியை கொன்று, காதலியின் வீட்டில் தற்கொலை செய்த காதலன்.. பதறவைக்கும் பருவக்காதல் சம்பவம்.!
16 வயது காதலியை கொன்று, காதலியின் வீட்டில் தற்கொலை செய்த காதலன்.. பதறவைக்கும் பருவக்காதல் சம்பவம்.!

பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், காதலியை கொலை செய்து அவரின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பயங்கரம் நடந்துள்ளது.
வேலூர் நகரில் உள்ள வள்ளலார், தெற்கு வீதி சாலையில் வசித்து வருபவர் பாரதிதாசன். இவர் இராணிப்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தீபலட்சுமி. இவர் மற்றொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில், இளயமகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுவயதில் உயிரிழந்துள்ளார்.
இவர்களின் மூத்த மகளுக்கு 16 வயதாகவும் நிலையில், வள்ளலார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமியின் பாட்டி கருகம்பத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் இருக்கிறார். சிறுமி அவ்வப்போது தனது பாட்டியின் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், அப்பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 22) என்பவர் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பழக்கத்தை நாளடைவில் காதலாகவும் மாற்றிய நிலையில், இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். தினமும் காலை 8 மணிக்கு பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றால், மாலை 6 மணியளவில் தான் வீட்டிற்கு வருவார்கள். நேற்று வேலைக்கு சென்ற பெற்றோர், மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, சிறுமி தரையில் பிணமாக இருந்துள்ளார்.
ராம்குமார் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியுடன் தம்பதி அலறவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். பின்னர், இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன் மேலக்குப்பம் கோவில் தெருவில் வசித்து வந்த பாரதிதாசன், மகளின் படிப்புக்காக வேலூருக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனால் மாணவி அவ்வப்போது பாட்டியின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் தான் ராம்குமாரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் 3 வருடம் கழித்து பெற்றோருக்கு தெரியவரவே, பெற்றோர்கள் மகளை கண்டித்துள்ளனர்.
மேலும், ராம்குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடமும் விசையத்தை கூறி இருக்கின்றனர். இதனால் ராம்குமாரின் பெற்றோரும் தங்களின் மகனை கண்டித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று காலை 9 மணிக்கு காதலியான சிறுமியை பார்க்க ராம்குமார் அவரின் வீட்டிற்கு வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம்குமார் மாணவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.
கழுத்து இறுக்கப்பட்டு சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதே கயிற்றில் ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.