தமிழகம்

பள்ளியிலையே முதலிடம்..! தாயின் சேலையில் தூக்குபோட்டு தொங்கிய அரசு பள்ளி மாணவன்..! அதிர்ச்சி காரணம்..!

Summary:

Vellore 12 standard school topper commit suicide

பள்ளியில் முதலிடம் பெற்றும் மதிப்பெண் குறைவாக இருந்ததால் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த பாலாஜி-சுமதி இவர்களின் மகன் அசோக்குமார்(18) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

பள்ளியில் நன்கு படிக்கக்கூடிய அசோக்குமார் நேற்று வெளியான தேர்வு முடிவுகளை ஆசையோடு பார்க்க சென்றுள்ளார். பள்ளியிலையே அதிக மதிப்பெண் பெற்று அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும் அசோக்குமார் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மதிப்பெண் குறைந்ததால் மிகவும் சோகத்தில் இருந்த அசோக்குமார் வீட்டுக்கு அருகேயிருந்த மாந்தோப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement