
Velachery women killed her 2 months old son
வேளச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் இரவு தூங்கும் போது புழுக்கமாக இருந்தது அதனால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் காலையில் எழுந்து பார்த்தால் தங்களது இரண்டு மாத ஆண் குழந்தையை காணவில்லை, இதுதான் எங்கள் முதல் குழந்தை எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள் என்று கதறிய சம்பவம் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியது.
வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள். இந்நிலையில் விடியற்காலை மூன்று மணி அளவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு காலையில் பார்த்தால் குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்தனர்.
விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை அந்த பகுதில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய தொடங்கினர். அப்போது சுமார் இரண்டு மணி அளவில் நைட்டியுடன் ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போவது பதிவாகியிருந்தது. இந்நிலையில் அருகில் உள்ள குளம் ஒன்றில் இரண்டு மாத குலத்தின் சடலம் ஓன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குளத்தில் இறந்து கிடந்தது காணாமல் போன அந்த குழந்தைதான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த குழந்தையின் தாய் மீது விசாரணையை தொடர்ந்தனர். போலீசாரின் கிடுக்குபிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய உமா ஒரு கட்டத்தில் குழந்தையை தான்தான் கொன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
குழந்தைக்கு பால்கொடுக்கும்போது நெஞ்சு வழித்ததாகவும் அதனாலேயே குழந்தையை கொன்றேன் என்றும் உமா கூறியுள்ளார். ஆனால் அது காரணமாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்றும் குன்றத்தூர் அபிராமி போல் கள்ளகாதலுக்காக குழந்தையை கொலை செய்திருக்கலாமோ என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement