என் பொண்டாட்டிய காணும்.. 6 மணிக்குள்ள வேணும்.. போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் பகீர் புகார்..!

என் பொண்டாட்டிய காணும்.. 6 மணிக்குள்ள வேணும்.. போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் பகீர் புகார்..!


vedasanthur-police-investigated-boy-case

மனைவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த கணவர், இன்று ஆறு மணிக்குள் கண்டுபிடிக்கவில்லை எனில் மற்றொரு புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் குமார். இவர் தற்போது திண்டுக்கல்லில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. 

தம்பதிகள் வேடசந்தூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், இவரது மனைவியை காணாததால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், தனக்கு 17 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றதாகவும், தனது மனைவியை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

Thindukal

வேடசந்தூரில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், மனைவியை காணாததால் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றே தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறும், மாலை 6 மணிக்குள் அழைத்து வரவில்லை என்றால் மீண்டும் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

புகாரளிக்க வந்தவரிடம் அதிகாரிகள் எப்பொழுது மனைவியை காணவில்லை? என கேட்டதற்கு சரியாக அவர் பதில் கூறாததாலும், 17 வருடங்களாக காணவில்லை என்று ஒரு இடத்தில் தெரிவித்ததாலும், மேற்படி விபரங்கள் கூறாமல் இருப்பதாலும் குமார் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.