யாரு மேடம் நீங்க..? வனிதாவால் குழம்பி போன யூடியூப் நிறுவனம்..! வனிதாவுக்கு வந்த மெயில்.!Vanitha talks about YouTube mail

தன்னை பார்த்து யூடியூப் நிறுவனமே குழப்பி போய் இருப்பதாக நடிகை வனிதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் விவாகரத்து ஆன நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவந்தனர். அதில் சூர்யா தேவி என்ற பெண் வனிதாவுக்கு நேரடியாக சவால் விடும் வகையிலும், அவரை மிரட்டும் வகையிலும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுவந்தார்.

vanitha

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா, யாருங்க நீங்க? என்று கேட்டு யூடியூப் தனக்கு மெயில் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். யூடியூபில் எங்கே பார்த்தாலும் என்னுடைய முகம் தான் தெரிகிறது, இதனால் யூடியூபில் நிறுவனமே குழம்பிப்போய் உள்ளதாக வனிதா கூறியுள்ளார்.

மேலும், என்னை பற்றிய தகவல்கள் அதிகம் வருவதால் நீங்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், என யூடியூப் தனக்கு அனுப்பியுள்ள மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக வனிதா கூறியுள்ளார். இதனை பார்த்து நான் பெருமைப்படுவதா, சிரிப்பதா, கோபப்படுவதா என்று கூட தெரியவில்லை என வனிதா கூறியுள்ளார்.