அரசியல் தமிழகம்

தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது.? வானதி சீனிவாசன் பேட்டி.!

Summary:

தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் பா.ஜ.க போட்டியிடும் என்பது குறித்து வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு, வாக்காளர்களை சந்தித்து வரு கின்றன. இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக அகில இந்திய  மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், தமிழகத்தில் கூட்டணி முடிவாகி விட்டது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். 

தேர்தலில் நான் போட்டியிடுவதையும் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கானாவில் கூட தற்போது டிஆர்எஸ், பாஜக என்ற நிலை ஏற்பட்டுள்ளது என பாஜக அகில இந்திய  மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


Advertisement