ஷேர் ஆட்டோவில் தனியாக சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஓட்டுனர் கைது.!Van driver harassment to school girl in Chennai

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கடந்த அக்டோபர் 30ம் தேதி பள்ளி முடிந்து தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் இருந்து ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

chennai

அப்போது தனியாக சென்ற பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுனர் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

chennai

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் பழைய வண்ணாரப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.