தமிழகத்தில் தலைதூக்கி ஆடும் பிரச்சினைகளுக்கு ஒற்றை டுவீட்டால் எதிர்ப்பு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

தமிழகத்தில் தலைதூக்கி ஆடும் பிரச்சினைகளுக்கு ஒற்றை டுவீட்டால் எதிர்ப்பு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!


Vairamuthu tweet about tamilnadu issues

அண்மையில் பிரதமர் மோடி லடாக்கில் உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில் திருக்குறளின் பெருமைகள் குறித்து உரையாற்றி இருந்தார். இதனிடையே சி.பி.எஸ்.இ. பாடத்தை குறைக்கும்போது, திருக்குறள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.  இந்நிலையில் இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை  தெரிவித்தனர். 
  
மேலும் சமீபத்தில் கந்தசஷ்டிகவசம் தொடர்பாக, அதனை அவமதிக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவும் பெரும் சர்ச்சையை கிளம்பியது. இதனிடையில் கோவையில், நேற்று, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம்  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை பாராட்டும் எங்களால் அதை நீக்குவதை ஏற்க முடியாது.
பெரியார் இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.