"10 வருடமா புள்ள இல்ல." உடல்நலம் பாதித்த மனைவி.. படுக்கையிலேயே மலம்.. அடித்தே கொன்ற கொடூர கணவன்.! 

"10 வருடமா புள்ள இல்ல." உடல்நலம் பாதித்த மனைவி.. படுக்கையிலேயே மலம்.. அடித்தே கொன்ற கொடூர கணவன்.! 


uttar-pradesh-husband-killed-wife-and-attack-very-harsh

திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஆத்திரத்தில் கணவன், மனைவியை அடித்து கொன்ற சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

Uttar pradesh

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் பகுதியில் இருக்கும் சாரதா நகரில் வசிப்பவர் சந்தீப் (வயது 30) இவருக்கு அல்கா என்ற 29 வயது பெண்ணுடன் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் நிறைய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Uttar pradesh

மேலும், மன உளைச்சலில் இருந்த மனைவி அல்கா பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்துள்ளார். இதில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் படுக்கையிலேயே மலம் கழித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்திப் அல்காவுடன் தகராறு செய்து அடித்து கொலை செய்துள்ளார்.

அல்காவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் சந்திப்பை போலீசார் கைது செய்த நிலையில், உயிரிழந்த அல்காவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.