சுகாதாரமற்ற குடிநீர்.. குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்.. மெத்தனப்போக்கில் அதிகாரிகள்.!

சுகாதாரமற்ற குடிநீர்.. குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்.. மெத்தனப்போக்கில் அதிகாரிகள்.!


Unsanitary drinking water.. Women are protesting with empty jugs for drinking water.. Officials are complacent.!

சென்னையை அடுத்த திருவெற்றியூர் பகுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக கூறி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

திருவெற்றியூர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் கார்கில் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சரியான குடிநீர் முறையாக வருவதில்லை என்றும் அவ்வாறு வந்தாலும் கூட சுகாதாரமற்ற முறையில் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Unsanitary water

மேலும் இந்த சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தொற்று நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இதனைக் குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.