வெற்றிபெற்ற கையோடு ஸ்டாலினை சந்தித்து உதயநிதி என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்..udhayanithi-stalin-meets-his-father-after-his-victory-i

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பாரத பிரதமர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் திமுக கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

stalin

தான் வெற்றிபெற்றதோடு, திமுக வெற்றிபெற்று விரைவில் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், தனது தந்தையும், திமுக கட்சியின் தலைவருமான ஸ்டாலின் அவர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த செங்கலை வழங்கி" மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பதை செங்கலில் எய்ம்ஸ் என எழுதிக்காட்டி உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.