12 ஆம் படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர ஆவலுடன் காத்திருந்த மாணவர்கள்.! நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது பரிதாபம்.!

12 ஆம் படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர ஆவலுடன் காத்திருந்த மாணவர்கள்.! நண்பர்களுடன் குளிக்கச்சென்றபோது பரிதாபம்.!


two youngsters died in lake

திருவள்ளூா் அருகே ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் மகன் சஜீவன்(17), வடிவேல் என்பவரின் மகன் அருள்ஆா்யன் (17), அதே பகுதி காமராஜா் நகரைச் சோ்ந்த சத்யநாராயணன் என்பவரின் மகன் பிரவீன் வெங்கடேசன் (17) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து  நேற்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளித்து கொண்டு இருந்தார்.

ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது சஜீவன், அருள்ஆா்யன் ஆகியோா் நீரில் மூழ்கினா். கரையில் இருந்த பிரவீன் வெங்கடேசன் தனது நண்பா்கள் நீரில் மூழ்கியதைக் பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளார். ஆனால் சஜீவன் மற்றும் அருளரசன் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நேரில் மூழ்கி பலியான 2 பேரும் 12 ஆம் படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.