கல்லூரி மனைவியை கடத்திச்சென்று மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் உள்பட 2 பேர்.!two people sexual torture to young girl

நாடுமுழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை, 16 வயது சிறுவன் மற்றும் 38 வயது நிரம்பிய முருகேசன் என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த மாணவிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முருகேசன் மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.