தமிழகம்

திருமாவளவனின் பிறந்தநாள்.! விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்ட போது இருவர் உயிரிழப்பு.!

Summary:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அக்கட்சியின் ஆதரவாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை நட்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழாயூர் காலனியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திருமாவளவன் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர். இதற்காக இளையான்குடி காவல் நிலையம் அருகே கீழாயூர் விலக்கில் கட்சி கொடிக்கம்பத்தை சரிசெய்து நடும் பணியில் நேற்று இரவு 8 மணி அளவில் அக்கட்சியினர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கொடி நட முயன்றபோது, மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் கொடி கம்பத்தை பிடித்து இருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் கீழாயூர் காலனியை சேர்ந்த குழந்தை(40), பிரபு(23) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement