கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்! அதனை சாதகமாக பயன்படுத்திய கடத்தல் கும்பல்! 2 பேர் கைது!

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்! அதனை சாதகமாக பயன்படுத்திய கடத்தல் கும்பல்! 2 பேர் கைது!



two-people-arrested-for-smuggling

கொரோனா பாதிப்பால் வெளியே வர அஞ்சி மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கும் சூழலை சாதகமாக பயன்படுத்திய கும்பல் ஒன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்த முயன்று சிக்கியுள்ளது.

சென்னை மண்ணடி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு இருந்த ஸ்கூட்டர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

smuggling

இதனையடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த செல்வமணி மற்றும்  இலங்கையைச் சேர்ந்த முகமது நிலாப் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பர்மாவில் இருந்து சென்னை வழியாக இலங்கைக்கு இந்த போதை பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரோனா தாக்கத்தால் ஊர் வெறுச்சோடி கிடப்பதால் போலீசார் கெடுபிடி இருக்காது என நினைத்து இந்த சமயத்தை தேர்ந்தெடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.