தமிழகம் Corono+

மகிழ்ச்சியான செய்தி..! கொரோனோவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!

Summary:

Two more corono patients discharged minister vijabaskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42-ஆக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞரும், அயர்லாந்தில் இருந்து திரும்பிய நபரும் டிஸ்சார்ச் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே 2 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ச் ஆன நிலையில், தற்போது மேலும் இருவர் டிஸ்சார்ச் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement