தமிழகம்

இறப்பிலும் இணைபிரியாத இரட்டை சகோதரிகள்..! தாயின் கண் எதிரே குளத்தில் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சோகம்..!

Summary:

Twin girl babies died near Trichy

தாயின் கண் எதிரே இரட்டை குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூர் சங்கம்பட்டியில் வசித்து வருபவர்கள் வீரமலை - கண்ணம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 ஆண்பிள்ளைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக இரட்டை சகோதரிகளா பிறந்தவர்கள் ராமுப்ரியா (9), லெட்சுமிப்ரியா(9).

சிறுமிகள் இருவரும் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் துணிதுவைப்பதற்காக கண்ணம்மாள் தனது மகள்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்தனர்.

image

இதனிடையே குழந்தைகள் இருவரும் குளத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்துள்ளனர். இதனை கவனிக்காமல் கண்ணம்மாள் துணி துவைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட கண்ணம்மாள் கதறி துடித்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், போகும் வழியில்லையே குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இதனை அடுத்து குழந்தைகளின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவளர்கின்றனர். தாயின் கண்முன்னே குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement