புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: "தூற்றுவோரை போற்றுவோம்?" - சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.!
அரசியல் கொள்கை ரீதியாக விஜயை வறுத்தெடுத்த சீமானுக்கு, நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலை இலக்காக வைத்து காய்களை நகர்த்தி வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் நடத்தி முடித்துள்ளார். அரசியல்களத்தில் தவெக-வை சமீபகாலமாக சீமான் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
கொள்கை எதிரி
திராவிடக்கொள்கை, பிளவுவதை அரசியல் போன்றவை தனக்கு எதிரி, அந்த அரசியல் கொள்கை எதிரிகளை ஒதுக்கி 2026 தேர்தலில் வெற்றி அடைவோம் என விஜய் பேசியிருந்த நிலையில், சீமான் தனது சார்பில் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: #JustIN: "விசிக தான் துருப்புச்சீட்டு" சிதறடிக்கப்பட்டும் திமுக கூட்டணி? - திருமாவளவன் பரபரப்பு தகவல்.!
சீமான் விமர்சனம்
விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிடாத வரை விஜயை எனது தம்பி என பேசி வந்தவர், திடீரென களத்தில் கடும் சொற்களை பயன்படுத்தி பேசியது விவாதத்தை உண்டாக்கி இருந்தது.
விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என விஜய் ட்விட் பதிவு செய்துள்ளார்.
விஜய் அரசியலில் களமிறங்கி கொள்கை மாநாட்டில் பேசும்போது, எதிர்ப்பு அரசியல் பேச நாம் வரவில்லை என்று கூறியிருந்த நிலையில், அந்த கொள்கையை பின்பற்றும் பொருட்டு அவர் வாழ்த்து தெரிவிப்பதாகவே இந்த விஷயம் கவனிக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) November 8, 2024
இதையும் படிங்க: தவெக முதல் மாநாடு.. விபத்து, மாரடைப்பில் பலியான உயிர்கள்..!