ஆளு பார்க்கத்தான் டிப் டாப்பு!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! பரபரப்பு சம்பவம்..

ஆளு பார்க்கத்தான் டிப் டாப்பு!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! பரபரப்பு சம்பவம்..


Tutorial college owner abused a student

தன்னிடம் படிக்கவந்த 17 வயது சிறுமியை கற்பமாக்கிய டுடோரியல் கல்லூரி நிறுவனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லோகநாதன் என்ற நபர் நடத்திவரும் டுடோரியல் கல்லூரி ஒன்றில் எண்ணமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் படித்துவந்துள்ளார். 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த அந்த மாணவி குறிப்பிட்ட டுடோரியல் கல்லூரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து சந்தேகமடைந்த பெற்றோர், மாணவியை மருத்துவமனை அழைத்துச்சென்று சோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரிக்கையில், தன்னை தேர்ச்சிபெற வைப்பதாக கூறி, டுடோரியல் கல்லூரி நடத்திவரும் லோகநாதன் பாலியல் துஷ்ப்ரயோகம் செய்தததாக மாணவி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையாயத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் படித்த 18 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட லோகநாதனுக்கு 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.