தமிழகம்

டியூசன் படிக்க வந்த மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை!

Summary:

tuition teacher abused students


சென்னை தியாகராயர் நகரை சேர்ந்தவர் சஞ்சனா. பட்டதாரியான இவர் வீட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான டியூசன் சென்டரை நடத்தி வந்துள்ளார். இவரிடம் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டியூசனில் படித்து வரும் மாணவி, பெற்றோரிடம் ஆசிரியை சஞ்சனா மற்றும் அவரின் நண்பர் பாலாஜி இருவரும் மிரட்டி என்னை, வற்புறுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்தனர் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அருகில் இருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் சஞ்சனா மற்றும் பாலாஜியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டியூசன் சொல்லித் தரப்படும் வீட்டில் இதற்காகவே படுக்கை அறை ஒன்றை இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு மாணவ மாணவிகளை ஆபாசமாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து அவற்றை மாணவிகளிடம் காண்பித்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கும் படி வற்புறுத்தியும், மிரட்டி பணம் பிரித்துள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் இருவரின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து பார்த்த போது, அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. வீட்டுக்குள் அடைத்து வைத்து மாணவ மாணவிகளை பாலியல் கொடுமைம படத்திய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்​தியுள்ளது.      


 


Advertisement