அரசியல் தமிழகம்

நானும் சசிகலாவும் அவர்களோடு ஒருபோதும் இணையமாட்டோம்! டிடிவி தினகரன் அதிரடி!

Summary:

ttv talk about rajini and sasikala


சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் ரஜினிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது. தமிழர் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து பேசியிருக்கலாம். கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதி போராளி, பெண்ணுரிமை போராளி என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய டிடிவி கட்சி இணைப்பு பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா சிறையில் இருந்து வெளியில் வர சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய மாட்டோம் தெரிவித்தார்.
 


Advertisement