அரசியல் தமிழகம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.! மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்த டிடிவி தினகரன்.!

Summary:

சிலிண்டர் விலையைக் குறைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 15 நாள் இடைவெளியில் ரூ.100 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

ஏற்கனவே டிசம்பர் 1- ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 610- லிருந்து ரூபாய் 660 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் வேலைவாய்ப்பு குறைந்து பலரும் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுவரும் சூழ்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டதால் அரசியல் கட்சியினர் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


இதுகுறித்து டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பதிவில், " சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல. 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன் " என தெரிவித்துள்ளார்.


Advertisement